Connect with us
 

Reviews

ரெபல் – விமர்சனம் !

Published

on

Cast: GV Prakash Kumar, Mamitha Baiju, Venkitesh.vp, Shalu Rahim, Karunas, Adhithya Baskar, Kalloori Vinoth, Subramaniya Siva
Production: Studio Green
Director: Nikesh.R.S
Cinematography: Arun Radhakrishnan
Editing: Vetre Krishnan
Music: GV Prakash Kumar
Language: Tamil
Runtime: 2 H 21 Mins
Release Date: 22/March 22/ 2024

இயக்குநர் நிகேஷ் ஆர் எஸ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ரெபல். இயக்குநர் நிகேஷ் அவரின் உறவிருக்கு ஒருவர் நடந்த கதைதான் இப்படத்தின் கதை.

1980 காலகட்டங்களில் நடக்கும் கதைதான் இப்படம். கேரளாவின் மலைப் பிரதேசமான மூணாரில் அதிகம் தமிழகர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு வசிக்கும் இளைஞன் ஜிவி பிரகாஷ் கேரளாவில் இருக்கும் பாலாக்காடு சென்று அங்கு உள்ள அரசுக் கல்லூரி ஜிவி பிரகாஷ் நண்பன் ஆதித்யா இருவரும் படிக்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆதித்யாவை அந்த கல்லூரியில் உள்ள அரசியல் பின்னணி கொண்ட கல்லூரி சேர்மன் மலையாள மாணவன் வெங்கிடேஷ் ராகிங் என்ற பெயரில் அசிங்கப்படுத்துகிறார். வழக்கமாக அந்த கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களை எப்போதுமே தரக்குறைவாக நடத்துவமே வழக்கம். இப்படியே போக ஒரு கட்டத்தில் ஜிவி பிரகாஷ் நண்பன் வெங்கிடேஷ் கொலை செய்யப்படுகிறார். இதனால் கொதித்தெழும் ஜிவி பிரகாஷ் மற்றும் அங்கு படிக்கும் தமிழ் மாணவர்கள் அடுத்து நடக்கும் கல்லூரி மாணவர் பேரவை சேர்தலில் அங்குள்ள இரு மலையாள கட்சிகளை எதிர்த்து நிற்கிறார்கள். அதன் பின்னர் என்ன ஆனது வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படம் முழுவதுமே மலையாள மாணவர்கள் அரசியல்வாதிகளையும் அங்குள்ள போலீஸ் அதிகாரிகளையும் வில்லன்களாக காட்டியுள்ளார் இயக்குநர். ஆனால் அதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும் காரணம் இது உண்மைக்கதை. படத்தில் பல காட்சிகளை தைரியமாக வெளிப்படையாக காட்டியுள்ளார் இயக்குநர் நிகேஷ் வாழ்த்துக்கள்.

வழக்கமாக ஒரே பாதையில் படங்களை நடித்து வரும் ஜிவி பிரகாஷ் இப்படத்தில் மூணார் எஸ்டேட் தோட்டத்து தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த மிகவும் வறுமையான இளைஞனாக தன்னை அந்த கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற போல மாற்றி மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். கதிர் என்ற கதாப்பாத்திரத்தில் தமிழ் மாணவர்களை காப்பாற்ற துடிக்கும் ஒரு தைரியமான இளைஞனாக நடித்துள்ளார். படத்தின் முதல் பாதியில் காதல் கொண்டவராகவும் இடைவேளைக்கு பின்னர் தமிழர்களை காப்பாற்றும் காப்பானாகவும் மிக பொருத்தமாக நடித்துள்ளார்.

படம் ஆரம்பித்து போய்க்கொண்டே இருக்கிறது என்ன கதை இது என நம்மை யோசிக்க வைக்கிறது. முதல் பாதியில் வரும் படத்தின் நாயகி மமிதா பைஜுவை பார்த்ததும் காதல் கொள்ளும் ஜிவி பிரகாஷ். அதன் பின்னர் இருவரும் தங்களின் காதலை கண்கள் மூலம் பரிமாற்றிக்கொள்கிறார்கள். அவ்வளவுதான் மமிதா பைஜு வேலை அதன் பின்னர் அவருக்கு படத்தில் அவர் முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுகிறது வழக்கம் போல.

ஜிவி பிரகாஷ் நண்பர்கள் ஆதித்யா, ஆண்டனி உள்ளிட்ட தமிழ் மாணவர்களை பார்த்த கொலை செய்யும் அளவுக்கு விரட்டி விரட்டி அடிக்கும் வில்லனாக வெங்கிடேஷ். மலையாள மாணவர்கள் இப்படித்தான் நடந்து கொள்வார்களே என நம்மை நினைக்க வைக்கிறது. மற்றுமொரு மலையாள மாணவனாக வரும் ஷாலு ரஹிம் மிக குறைவான காட்சிகள் வதாலும் தமிழ் மாணவியின் ஆடையை அவிழ்த்து விடும் ஒரு கொடூரமான வில்லனாக நடந்து கொள்கிறார். இந்த இரு மலையாள வில்லன் மாணவர்களுக்கும் பின்னர் இருப்பது காங்கிரஸ் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்தவர்கள். அதிலும் நீலம் என்றால் எதிர்ப்பு சிவப்பு என்றாலும் எதிர்ப்பு என குறியீடுகளுடன் காட்டியிப்பது என்ன ஒரு தைரியம் நிகேஷ் அவர்களுக்கு என பாராட்ட சொல்கிறது.

படத்தில் வரும் மற்ற பல கதாப்பாத்திரங்கள் மத்தியில் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் ஆதித்யா. ஜிவி பிரகாஷ் கல்லூரி நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், அப்பாவாக வரும் சுப்பிரமணிய சிவா நிறைவான நடிப்பு. அதே போல கல்லூரி பேராசியராக வரும் தமிழர் கருணாஸ் என அனைவருமே நிறைவான நடிப்பு.

ஜிவி பிரகாஷ் பின்னணி இசை மேல் சிலிர்க்க வைக்கிறது. படத்தில் பல காட்சிகளுக்கு உயிரோட்டமாக உள்ளது. அடுத்து படத்தின் ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் கல்லூரி மற்றும் ஹாஸ்டெல் என இரண்டு இடங்கள் மட்டுமே படத்தில் வருகிறது அதை பல கோணங்களில் அற்புதமாக படமாக்கியுள்ளார்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை மிக மிக மெதுவாக நகர்கிறது. படத்தின் கதைக்குள் வருவதற்கே நெறைய நேரம் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். படத்தின் இரண்டாம் பாதி கல்லூரி தேர்தல் என்று ஒன்று ஆக்கிரமித்து விடுகிறது. படத்தின் உச்சக்கட்டம் என்றால் படத்தின் இறுதி 25 நிமிடங்கள்தான்.

 

Rating [3/5]