Connect with us
 

News

தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மோதவுள்ள 6 வில்லன்கள் !

Published

on

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்கவுள்ளார் விஜய். இதனை தற்போது Thalapathy 67 என்று அழைக்கப்படுகிறது.

விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் விஜய்யுடன் இணையவுள்ளதால் லோகேஷ் கனகராஜ் மீதும் Thalapathy 67 படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் தான் தற்காலிமாக சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதால் இரண்டு நான்கு நாட்களுக்கு முன் அறிவித்தார் லோகேஷ் கனக்ராஜ்.

தற்போது கிடைத்த தகவலின் படி Thalapathy 67 படத்தில் கே.ஜி.எப் 2 படத்தின் வில்லன் பாலிவுட் நடிகர் சஞ்சய் சத், மலையாள நடிகர் பிரித்விராஜ் என 6 நடிகர்கள் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.