Connect with us
 

News

மீண்டும் இணையத்தில் கசிந்த வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் !

Published

on

வம்சி இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் திரைப்படம் Varisu. விஜய் படமென்றாலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் அந்த எதிர்பார்ப்பு Varisu படத்திற்கும் உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படக்கள் திருட்டுத்தனமாக வெளியானது அதில் விஜய் ரத்த கறையுடன் வணிக வளாகத்தில் நிற்கும் புகைப்படம் வெளியானது.

இதனால் Varisu திரைப்பட தளத்திற்கு செல்போன் கொண்டு வர தடை விதித்தது படக்குழு. இதையும் மீறி மீண்டும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்னர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் படப்பிடிப்பை நடத்தியபோது சிலர் அதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் தள்ளி அவரோடு சண்டை போடும் காட்சிகளும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு படக்காட்சி கசிந்துள்ளது. அதில் விஜய் கோட் ஷூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த புகைப்படத்தை வேகமாக ரசிகர்கள் வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளனராம்.