Connect with us
 

News

நடிகர் சங்க கட்டிடப் பணிகளுக்கு ரூ.1 கோடி அளித்த தளபதி விஜய் !

Published

on

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் ரூ.40 கோடி தேவைப்படுவதாக சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து அதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் ரூ.1 கோடி வழங்கினர். இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியதாகத் தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளது.