Connect with us
 

News

தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்ற தளபதி 67 படக்குழு !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தளபதி 67. சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில். அடுத்த கட்டமாக காஷ்மீரில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர்.

இந்த நிலையில் தளபதி 67 படக்குழுவினர் இன்று சென்னையில் இருந்து காஷ்மீருக்கு தனி விமானம் மூலம் சென்றுள்ளனர்.

காஷ்மீரில் இரண்டு வாரங்கள் நடைபெறும் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்து எங்கு என்ற முடிவை படக்குழு எடுப்பார்கள் என கூறப்படுகிறது.

விஜய், த்ரிஷா, அர்ஜூன், மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை மிக பிரம்மாண்டமாக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் தயாரிக்கின்றனர்.