Connect with us
 

News

நாம் எதை செய்தாலும் குறை சொல்றாங்க – தனுஷ் !

Published

on

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. சத்யா ஜோதி ஃபிலிம் தயாரிக்கும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார்.
தன்னுடன் இப்படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தனுஷ் ‘ சிறு துளி பெரு வெள்ளம் என்பார்கள். நான் சிறு துளிகளாக சேர்த்த எனது ரசிகர்கள் இங்கு பெரு வெள்ளமாக திரண்டிருக்கிறார்கள். நான் வரும் போது கோஷம் எழுப்பினார்கள். இந்த ஒரு நொடிக்காகத்தான் இத்தனை போராட்டம், இத்தனை கடின உழைப்பு.

கேப்டன் மில்லர் படம் வலியுறுத்துவது ஒருவனுக்கு தேவை சுதந்திரம், மரியாதை அது கிடைக்காவிட்டால் அதற்கான போராட்டம் நடக்கும் என்பதுதான். ஆனால் இந்த இரண்டும் இப்போது இல்லை. எது செய்தாலும், எது பேசினாலும் குறை சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது. அது சிறு கூட்டம்தான் ஆனால் அது செய்வது சுதந்திர துஷ்பிரயோகம்.

அவன் அதை செய்வதா? அதை பேசுவதா? இதை பேசுவதா? என்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துக் கொள்வான். எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும். எண்ணம்போல்தான் வாழ்க்கை என்று பேசினார்.