Connect with us
 

News

இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கும் தக் லைப் படப்பிடிப்பு !

Published

on

விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் கமல் ஹாசனின் 234-வது திரைப்படம். இப்படத்திற்கு தக் லைஃப் என பெயரிட்டுள்ளது படக்குழு.

கமல்ஹாசனுடன் இப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாம். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளதாம். அதனை தொடர்ந்து வெளிநாடு சென்று படப்பிடிப்பை நடத்தவுள்ளது படக்குழு. முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களத்துடன் இப்படம் உருவாகவுள்ளது.