Connect with us
 

News

சல்மான் கானுக்கு ஜோடியாகும் த்ரிஷா !

Published

on

இயக்குநர் விஷ்ணுவர்தன் தற்போது அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் நாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

இப்படத்தை முடித்த பின்னர் இந்தியில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோவாக சல்மான் கான் நடிக்கவுள்ளார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்ப்பக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வரவுள்ளது. இப்படம் மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் கதாநாயகியாக மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு அக்ஷய் குமார் நடித்த கட்டா மீட்டா படத்தில் நடித்திருந்தார்.

தற்போது அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இதனை தவிர மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஜடடென்டிட்டி என்ற படத்திலும் மோகன் லால் நடிக்கும் ராம் பார்ட் 1 படத்திலும் நடித்து வருகிறார்.