Reviews
சிங்கப்பூர் சலூன் – விமர்சனம் !
Cast: RJ Balaji, Sathyaraj, Lal, Kishen Das, Meenakshi Chaudhary, Ann Sheetal, Thalaivasal Vijay, John Vijay, Robo Shankar
Production: Vels film International Ltd
Director: Gokul
Screenplay: Gokul
Cinematography: M.Sukumar
Editing: Selva RK
Music: Vivek – Mervin
Language: Tamil
Runtime: 2Hrs 17Mins
Release Date: 25/01/2024
தன் வாழ்க்கையில் தனக்கு விருப்பமான தொழிலை செய்து அதில் முன்னேற துடிக்கும் துடிப்பான ஒரு இளைஞனின் கதைதான் இந்த சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை.
படத்தின் நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி சிறுவனாக இருக்கும் போதே தன் ஊரில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். ஒரு ஹேர் ஸ்டைல் ஒரு மனிதனின் தோற்றத்தையே மாற்றி அவனுக்கு மரியாதை கிடைக்க வைக்கும் என நம்பி வாழ்ந்து வருகிறார்.
தான் வளர்ந்து பெரியவன் ஆனதும் மிகப்பெரிய ஹேர் ஸ்டைலிஷ் ஆக வேண்டும் என நினைக்கிறார். அப்பா சொல்லும் வார்த்தைகளாக பொறியியல் படித்து முடிக்கிறார். பின்னர் சென்னையிலுள்ள ஒரு சலூன் கடையில் வேலைக்கு சேர்கிறார். பின்னர் தனியாக 5 கோடி செலவில் சிங்கப்பூர் சலூன் என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பிக்கிறார். அவ்வளவு செலவு செய்து அந்த கடையை திறக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதற்கு என்ன காரணம் அந்த பிரச்சனையை தீர்த்தாரா இல்லையா கடையை திறப்பு விழா செய்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் ஆரம்பமே ஆர்.ஜே பாலாஜி தற்கொலை செய்து கொள்வது போன்றுதான் நமக்கு காட்டப்படுகிறது. வழக்கமாக தன் படங்களிலிருந்து கொஞ்சம் சீரியஸ் முகம் கொண்ட ஆர்.ஜே.பாலாஜியை இப்படத்தில் பார்க்க முடிகிறது. கண்டிப்பாக அந்த நக்கல், நையாண்டி பாலாஜியை இப்படத்தில் அனைவரும் மிஸ் பண்ணுவோம்.
பாலாஜி மனைவியாக வரும் நடிகை மீனாட்சி சவுத்ரி. கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
கஞ்சப் பிரபு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ் படத்தின் ஒரு திருப்புமுனை கதாப்பாத்திரம் என்பதால் இவருக்கு படத்தின் காட்சிகள் மிகவும் அதிகம். தனக்கு கிடைத்த அந்த இடத்தில் எல்லாம் ஜோதிகா போலவே நடித்துள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியின் நண்பர்களாக வரும் கிஷன் தாஸ், சகலை ரோபோ சங்கர், இந்தியாவின் முன்னணி ஹேர் ஸ்டைலிஷ் ஜான் விஜய், பாலாஜியின் குரு லால், அப்பாவாக வரும் தலைவாசல் விஜய் என அனைவரும் ரசிக்கும் படியான நடிப்பு.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே மிகவும் சுமார் ரகம்.
படத்தின் கிளைமாக்ஸ் வழக்கமான ஒரு சினிமாத்தனமான முடிவு என்றாலும். நம்மை நெகிழ வைத்துவிடுகிறது என்பதுதான் உண்மை. இந்த பூமி நமக்கு மட்டும் ஆனது இல்லை என்பதை கூறுகிறது !