News

போஸ்டர் ஒட்டி தனுஷ் பட தயாரிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்த ரசிகர்கள் !

Published

on

கடந்த வருடம் கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளால் பல தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியானது. இதற்கு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி நான் ஓ.டி.டி தளத்தில்தான் படத்தை வெளியிடுவேன் என்று வெளியிட்டார் சூர்யா தனது சூரரை போற்று திரைபப்டத்தை அப்படி எதிர்த்து வெளியிட்டாலும் அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு விமர்சனத்தை பெற்றது.

இதனையடுத்து மாஸ்டர் திரைப்படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாமோ என்ற அச்சத்தில் இருந்தனர் விஜய் ரசிகர்கள் ஆனால் விஜய் சரி படக்குழும் சரி வெளியிட்டால் படத்தை திரையரங்கில் மட்டும்தான் வெளியிடுவோம் என்று கூறி பொங்களுக்கு திரைப்படமும் திரையரங்கில் வெளியாகி தற்போது வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஜகமே தந்திரம் படத்தை ஓ.டி.டி தளத்தில் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கும் வகையில் ஆவடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலார்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version