News
ஃபோர்ப்ஸ் இந்தியா பட்டியலில் இடம்பிடித்த சாய் பல்லவி !

இந்திய அளவில் 30 வயதுக்கு கீழ் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் சாய் பல்லவி இடம்பிடித்துள்ளார்.
நடனம் மீது ஆர்வம் கொண்ட சாய் பல்லவி ஆரம்பத்தில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் . ஜெயம் ரவி நடித்த “தாம் தூம் “படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். பிறகு “பிரேமம்” என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி மலர் டீச்சர்ராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
தமிழில் “மாரி2” படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் யூட்யூபில் 700 மில்லியன் வியுவர்களை கடந்து புதிய சாதனை படைத்து வருகிறது. மலையாளம் , தமிழ் , தெலுங்கு என மொழிகளில் நடித்து வருவாவதால் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .
தற்போது ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்ட அண்டர் 30 பட்டியலில் சாய் பல்லவி இடம் பெற்றுள்ளார்.27 வயதான சாய் பல்லவியுடன் இந்தப் பட்டியலில் 30 பேர் இடம் பெற்றுள்ளனர். வேறு எந்த தென் இந்திய நடிகையும் இடம் பெறவில்லை . ஃபோர்ப்ஸ் இந்தியா 30 இடம் பெற்றது இருப்பது தனக்கு கிடைத்த பெருமை என்று சாய் பல்லவி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
By : Saranya
Follow @Saran55288794