News
அடுத்த ஒரு வருடத்துக்கு எதும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான் !
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வருடத்தில் அவ்வப்போது வெளிநாடுகளில் சென்று நேரடி இசை நிகச்சிகள் நடத்துவது வழக்கம். அதன் படி இந்த வருடத்தில் மே மற்றும் ஜீன் மாதத்தில் வட அமெரிக்காவிற்க்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தார். தற்போது உலகமெங்கும் பரவி பல லட்சம் பொது மக்களை கொண்டு வரும் கொரோனா வைரஸ் காரணமாக அந்த பயணத்தை ஒரு வருடத்திற்க்கு தள்ளி வைத்துள்ளார்.
இது பற்றி அவர் கூறும் போது இந்த வருடம் மே மற்றும் ஜீன் மாதங்களில் வட அமெரிக்காவில் இசை பயணம் மேற்க்கொள்ள இருந்தேன் ஆனால் தற்போது உள்ளா சூழ்நிலையில் அங்கு செல்ல முடியவில்லை அதனால் அந்த பயணத்தை ஒரு வருடத்திற்க்கு தள்ளி வைத்துள்ளேன்.
மீண்டும் அங்கு வருவது குறித்து நான் அப்டேட் செய்து கொண்டே இருப்பேன் எனது இசை பிரியர்களே மீண்டும் நாம் இணைவோம். நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.