Connect with us
 

News

ஒரு குட்டி கதை சொன்னது வேறும் யாரும் இல்லை தளபதி விஜய்தான் !

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் “மாஸ்டர்”. இந்தப் படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, சாந்தனு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மாஸ்டர்” படத்தின் படப்பிடிப்பு சென்னை , டெல்லி,கர்நாடகா, நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் மற்றும் தர்டு லுக் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஒரு குட்டி கதை பிப்ரவவி 14 அன்று மாலை 5 மணி அளவில் வெளியாகிறது என படக்குழு அறிவித்தனர் இந்நிலையில் ஒரு குட்டி கதை பாடலை தளபதி விஜய் பாடி இருப்பதாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

இதனால் பாடல் வருவதற்கு முன்பே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக அனிருத் இசையில் “கத்தி” படத்தில் விஜய் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

By : Saranya