Connect with us
 

News

எதிர்மறை விமர்சனங்களை உடைத்து கமர்ஷியல் ஹிட் தந்த சீறு !

Published

on

விஜய் சேதுபதி நடித்த ” ரெக்க ” படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்து இருக்கும் படம் “சீறு”. வேல்ஸ் ஃபில்ம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த வாரம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

நடிகர் ஜீவாவிற்கு கடந்த ஆண்டு வெளிவந்த படங்கள் அவர் எதிர் பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை ஆனால் இந்த படம் ஜீவாவிற்கு சீறு படம் சிறந்த கம்பேக் படமாக அமைந்தது . இதனால் டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வேல்ஸ் ஃபில்ம்ஸ் தயாரித்த எல்லாப் படங்களும் கமர்ஷியல் வெற்றி பெற்றது.அந்த வரிசையில் “சீறு” படம் இணைந்து உள்ளது. இந்தப் படத்தில் ஜீவா , ரியா சுமன், காயத்ரி , நவ்தீப், வருண், சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சீறு படத்திற்கு டி. இமான் இசை அமைத்து இருக்கிறார்.

அண்ணன் , தங்கை, நட்பு சென்டிமென்ட் என கதைக்கு பலம் சேர்த்து , இரண்டாவது வாரம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது சீறு” படம் வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர் . இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.உலகம் முழுதும் “சீறு” படம் 50 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

By : Saranya