Connect with us
 

Uncategorized

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் படத்தின் தலைப்பு விடுதலை?

Published

on

அசுரன் படத்துக்காக கிடைத்த தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் அவரது படக்குழுவினரை ரொம்பவே உற்சாகப்படுத்தியுள்ளதாம். வெற்றி மாறன் தற்போது சூரி நடித்து வரும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய்சேதுபதி முன்பு பாரதிராஜா நடிப்பதாக கூறப்பட்ட கதாப்பாதிரத்தில் விஜய்சேதுபதி தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் நடந்து வருகிறது.

தற்போது இந்த படத்திற்கு கடந்த 1988-ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் , ரஜினிகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான விடுதலை என்ற படத்தின் தலைப்புதான் இப்படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாகும் என்கிறார்கள்.

துணைவன் என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிவருகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாகவும் இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளாராம் வெற்றி மாறன்.

இப்படத்தை தொடர்ந்து தனுஷ் மற்றும் விஜய் நடிக்கும் படங்களை அடுத்தடுத்து இயக்கவுள்ளாராம் வெற்று மாறன் என்று கூறப்படுகிறது.