News
குக் வித் கோமாளி பவித்ராவுக்கு குவியும் பட வாய்ப்புக்கள் !

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பவித்ரா.
இந்த நிகச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் டான் படத்திலும் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் மிக முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதை தவிர்த்து மேலும் ஒரு புதிய படத்திலும் முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்கவுள்ளாராம் இப்படத்திஅ புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளார் அதை பற்றிய அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.