Connect with us
 

News

குறுப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி !

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் பவித்ரா லட்சுமி.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் வர ஆரம்பமானது. மலையாளத்தில் வெளியான உல்லாசம் என்ற படத்தில் நடித்தார். தமிழில் காமெடி நடிகர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஏனென்றால் காதல் என்பேன் என்ற குறுப்படத்தில் நடித்துள்ளார். இது நேற்று யுடியூப்பில் வெளியாகியுள்ளது.

இந்த குறுப்படத்தை தங்கய்யன் என்ற வாலிபர் இயக்கி நடித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- நவயுக காதலர்களின் மெலிதான நகைச்சுவையுடன் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளோம். அது மட்டுமில்லாமல் மிக மென்மையான காதலெனும் உணர்வை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறோம். அதற்கான கதாப்பாத்திரங்களையும் வலுவாக அமைத்துள்ளோம்.

பவித்ரா லட்சுமிக்கு தமிழ் ரசிகர்களிடையே ஒரு வலுவான இணைப்பு இருக்கிறது. இந்த குறும்படம் மூலம் அது மேலும் ஒரு படங்கு அதிகரிக்கும் என்றும் கூறினார்.