Connect with us
 

News

திடீரென திருமணம் செய்து கொண்ட சூர்யா பட நடிகை !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்த மாஸ் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி என ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்த நடிகை பிரணிதா சுபாஷ். யாருமே எதிர்பாராத விதமாக நேற்று நிதின் ராஜன் என்கிற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். இது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தம் மட்டுமே கலந்து கொண்டனர்.

இவரின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இது குறித்து பிரணிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- இது கொரோனா காலம் என்பதால் என் திருமணத்திற்கு யாருக்கும் நான் அழைப்பு விடுக்கவில்லை. அதனால் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.