Connect with us
 

News

மாநாடு படத்தின் முதல் பாடல் ரம்ஜான் அன்று வெளியாகது !

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு இப்படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.
சிம்புவுக்கு ஜோடியாக இப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற மே 14-ந் தேதி ரம்ஜான் பண்டிகையன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் மணிமேகலை நேற்று முன்தினம் காலமாணார். இதனால் ரம்ஜான் அன்று மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகது என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

இன்னோரு நல்ல தேதியில் இப்பாடலை வெளியிடுவோம் என்று கூறியுள்ளார் அதற்காக அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.