Connect with us
 

News

நகைச்சுவை நடிகர் மாறன் கொரோன தொற்றால் மரணம் !

Published

on

விஜய் நடிப்பில் வெளியான கில்லி மற்றும் குருவி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மாறன். இதை தொடர்ந்து டிஷ்யூம் பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டைக்காரன், பட்டாசு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்பொது பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வருகிறார் மாறன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மாறன். அவரின் மறைவுக்கு திரையுலகை சார்ந்த பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இவருக்கு வயது 48 ஆகும்.