Connect with us
 

News

மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கொரோனா தொற்று உறுதியானது !

Published

on

தளபதி விஜய் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். சற்று முன்பு இவரின் டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது அதில் அனைவருக்கம் வணக்கம் என்னுடைய நண்பர்கள், குடும்பம் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. ஆகையால், நான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறேன். விரைவில் குணமடைந்து திரும்புவேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.