News
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த அனுஷ்கா திரைப்படம் ஓடிடி-யில் வெளியீடு !

தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நடிகை அனுஷ்கா இவர் தற்போது இயக்குநர் ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘நிசப்தம்’ இப்படத்தில் நடிகர் மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாளம் என்று மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெளியாகும் நேரர்ரில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்டன அதனால் வெளியீட்டு தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. அதோடு இப்படத்தை வரும் அக்டோபர் 2 தேதி வெளியிடுகிறது இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நேரடியாக வெளியாகிறது.