Uncategorized
ரஜினியின் 169-வது படத்தை இயக்க இரு இயக்குனர்கள் போட்டி !

ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் முடிவடைய உள்ளது.
இதனையடுத்து மீண்டும் அண்ணாத்த பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படத்திலும் நடிக்க ரஜினி நடிக்க்வுள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
ரஜினியின் 169-வது படமாக உருவாக உள்ள இந்த படத்திற்காக இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜூம் தேசிங்கு பெரியசாமியும் போட்டி போட்டுக்கொண்டு ஆளுக்கொரு கதையை உருவாக்கி வருகின்றனர்.
இருவரும் சொன்ன ஒன்லைன் ரஜினிக்கு பிடித்து இருந்தாலும் முழுக்கதையும் உருவான பின்பே அதை படித்து பார்த்து விட்டு தன்னை அடுத்த இயக்க போவது யார் என்பது பற்றி ரஜினி அறிவிப்பார். இல்லை ரஜினி புதிய இயக்குனர்களை தேர்வு செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். அண்ணாத்த படத்தை பொறுத்தவரை ஒரு ஜாலியான கிராமத்து படமாக உருவாகியுள்ளதாம்.