News
விஜய்சேதுபதி – ஸ்ருதிஹாசன் இணையும் எஸ்.பி ஜனநாதனின் லாபம்

தமிழ்சினிமாவில் சில சமயம் சில படங்கள் அபூர்வங்களை நிகழ்த்தும். அது ஒரு ட்ரெண்ட் செட்டை உண்டு பண்ணும். சமுதாயத்தில் ஒரு விழிப்புணர்ச்சியையும் பெரு மலர்ச்சியையும் ஏற்படுத்தும். அப்படியான படங்கள் உருவாகும் தருணம் எல்லாமே உயரிய தருணம் தான். தற்போது அப்படியொரு தருணம் வாய்த்துள்ளது. ஆரஞ்சு மிட்டாய், ஜுங்கா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களைத் தயாரித்த நடிகர் விஜய்சேதுபதியின் சொந்த நிறுவனமான விஜய்சே
துபதி புரொடக்ஷனும், நாளு போலிஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு நல்லநாள் பார்த்துச் சொல்றேன் ஆகிய படங்களைத் தயாரித்த 7CS எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஒரு மிகப்பிரம்மாண்டமான படத்தை தயாரிக்கின்றன. படத்தின் பெயர் லாபம்.
இப்படத்தின் கதாநாயகனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.
தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரும் நாயகனாக மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் தன் படங்கள் மூலமாக லாபம் தரும் நாயகனாக இருப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அவர் லாபம் படத்தில் நடிக்க இருப்பதே முதல் லாபம்.
அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் படங்கள் வெறும் படங்களாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல பதிவாகவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் ஸ்ருதிஹாசன். அப்படியான படமாக அவருக்கு லாபம் அமைந்துள்ளது. லாபம் படத்தில் முதன்முதலாக அவர் நடிகர் விஜய்சேதுபதி உடன் ஜோடி சேர்கிறார். இவர்களோடு ஜெகபதிபாபுவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என அறமும் அரசியலும் பேசிய படங்களைத் தந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் லாபம் படத்தை இயக்குகிறார். இவரின் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருக்கிறது. இன்று பூஜையோடு ராஜபாளையத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. அதிரடி ஆக்ஷனும் அற்புதமான கதையும் கொண்ட இப்படம் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் சினிமா கரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பது படக்குழு சொல்லும் உறுதிமொழி.
முக்கியமான நட்சத்திரங்கள், தடம் பதித்த இயக்குநர் என இந்தக் கூட்டணியே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கையில், தரமான படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்வதை வாடிக்கையாக அல்ல வாழ்க்கையாக கொண்ட, பருத்திவீரன், இரண்டாம் உலகம் , தனி ஒருவன் ஆகிய படங்களில் ஒளிப்பதிவில் தனித்துவத்தை நிறுவிய ஒளிப்பதிவாளர் ராம்ஜியும் லாபத்தில் இணைந்து படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கிறார். எளிய மக்கள் உட்பட எல்லா மக்களும் ‘கண்ணான கண்ணே’ என கொஞ்சும் இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்தில் இசை அமைப்பாளராக பங்கெடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
முழுக்க முழுக்க பாஸிட்டிவிட்டிவ்ஸ் நிறைந்த இப்படம் படப்பிடிப்பு துவங்கிய முதல் நாளே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது