News
ஹன்சிகாவுக்கு வில்லனாகும் நடிகர் ஆரி !

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் Hansika Motwani சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அதன் முதன் படியாக மஹா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள 4 படங்களில் நடிக்க ஒப்ப்ந்தம் ஆகியுள்ளார். தற்போது புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இகோர் இயக்கும் இப்படத்தில் வில்லனாக ஆரி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது பல முன்னணி நடிகர்கள் வில்லனாக நடித்து புகழ் பெற்று வரும் நிலையில் அந்த வரிசையில் ஆரியும் இணைந்துள்ளார்.