Connect with us
 

News

மஹா படத்திற்காக 1000 அடியில் சிம்புவுக்கு பேனர் வைத்த ரசிகர்கள் !

Published

on

அறிமுக இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரில்லர் திரைப்படம் Maha இப்படம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம். இதில் தம்பி ராமையா, கருணாகரன், நாசர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 22-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில்தான் சிம்புவின் ரசிகரக்ள் 1000 அடியில் போஸ்டர் அடித்து அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகருக்கு 1000 அடியில் போஸ்டர் அடித்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

ஹன்சிகாவின் 50-வது படம் என்பதாலும் மீண்டும் சிம்பு ஹன்சிகா இணைந்து நடித்துள்ளனர் என்பதாலும் இப்படத்தின் மேல் அதிகமாக உள்ளது என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் இந்த 1000 அடி பேனர் மேலும் இப்படத்தின் ஆர்வத்தை தூண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.