Connect with us
 

Trailer

சித்தார்த் நடிக்கும் டக்கர் பட டிரைலர் வெளியானது !

Published

on

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டக்கார். இந்தப் படத்தின் டீஸர் நேற்று திங்கள்கிழமை வெளியானது. காதல் ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர்.

மே 26, 2023 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும் என தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் ’டக்கர்’ தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்க, வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது இதோ டிரைலர்.