News
ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 25-வது திரைப்படம் ஜப்பான் !
கார்த்தி-யின் 25வது படம் ‘ஜப்பான்’ – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு; ராஜு முருகன் இயக்குகிறார். தரமான, அர்த்தமுள்ள திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த பிரம்மாண்டப் படைப்பான ‘ஜப்பான்’ படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது.
2007ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதிலிருந்து ஜனரஞ்சகமான, அதே நேரம் வித்தியாசமானப் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கார்த்தி. 2022ஆம் வருடத்தில் 3 அடுத்தடுத்த தொடர் வெற்றிப் படங்களுடன் வாகை சூடியுள்ளார். ‘சகுனி’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ என 5 சூப்பர்ஹிட் திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் நாயகனாகியிருக்கிறார். இது அவரது 25வது படம் என்பது இந்தப் படத்தை இன்னும் விசேஷமானதாக்குகிறது.
கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாகவும் வெற்றி பெற்றவர் நடிகர் சுனில். கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் வில்லனாகவும் நடித்து மிரட்டியவர். ‘ஜப்பான்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சுனில். 25 வருடங்களாகத் தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ ஆகியத் திரைப்படங்கள் மூலம் இயக்குநராகவும், தனக்கென ஒரு பிரத்யேக அடையாளத்தை உருவாக்கியுள்ள விஜய் மில்டன், ‘ஜப்பான்’ திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.