News
லிங்குசாமி படத்தில் வில்லனாக மாதவன் !

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க வருகிறார்கள். ஏற்கனவே விக்ரம் வேதா மற்றும் மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துவிட்டார். தற்போது கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திலும் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கார்திக் ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆர்யா என பலர் தற்போது வில்லன் வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாதவனுக்கு வில்லனாக நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். 2000-ம் ஆண்டு வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான மாதவன்.தனது கடீன உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.
தெலுங்கு, இந்தி என வேறு மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கை கைதயான ராக்கெட்ரி படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் லிங்குமாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனி கதாநாயகனாக நடித்து தமிழ், தெலுங்கு, மொழிகளில் வெளியாகவுள்ள படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகிவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கதை மாதவனுக்கு பிடித்துள்ளதாகவும் அவர் நடிக்க ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் படக்குழு நம்பியிருக்கிறதாம்.