Connect with us
 

News

விஜய்யின் 66-வது படம் ரூ.200 கோடி வசூல்?

Published

on

விஜய் பீஸ்ட் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் இயக்கியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர தயாராகவுள்ளது.

இதையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகவுள்ளது. இப்படம் விஜய்க்கு 66-வது திரைப்படம்.

விஜய்யின் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் படங்களில் சாயலில் குடும்ப கதையம்சம் கொண்ட படமாக இப்படம் உருவாகவுள்ளதாக இப்படத்தின் தயாரைப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

இப்படத்தின் கதையை கேட்ட விஜய் கடந்த இருவது வருடங்களில் இப்படி ஒரு கதையை நான் கேட்டது இல்லை என்றும் எனக்கு இது முக்கியமான படமாக இருக்கும் என்று தெரிவிருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கி தீபாவளி இல்லை பொங்கல் பண்டிகையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் முன்பே அனைத்து மொழிகளிலும் தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியிடுவதற்கான டிஜிட்டல் உரிமை ரூ.200 கோடிக்கு விலை போய் இருப்பதாக தெலுங்கு இணையத்தில் தகவல் பரவி வருகிறது. படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே விஜய் படம் ரூ.200 கோடி வசூலித்து இருப்பது சாதனையாக கருதப்படுகிறது.