Connect with us
 

News

தனது மேனேஜரை நீக்கிய நடிகர் யோகி பாபு !

Published

on

தமிழ் சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்களுள் மிகவும் முக்கியமான நடிகர்களுள் ஒருவர் யோகி பாபு. இவரிடம் கடந்த சில ஆண்டுகளாக சசி என்பவர் மேனேஜர் பணி புரிந்து வந்தார். அவரை திடீரென யோகி பாபு நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து யோகி பாபு கூறுகையில் தன்னுடைய மேனேஜராக இருந்து வந்த சசி அவருடைய சொந்த பணியின் காரணமாக தன்னிடமிருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் சசியை யோகிபாபு நீக்கியதற்க்கு வேறு ஏதோ ஒரு முக்கிய காரணம் இருப்பதாக திரையுலகில் கூறப்படுகிறது. மேலும் இனிமேல் யாரும் எனக்கு மேனேர் கிடையாது என்றும் நானே நேரடியாக என் கால்சீட் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இனிமேல் யோகி பாபுவை வைத்து படம் எடுக்க ஆசைப்படும் அனைத்து தயாரிப்பாளர்களும் யோகி பாபுவை நேரடியாக சந்தித்து பேசலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.