Connect with us
 

Teaser

சிம்பு தேவன் இயக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் போட் !

Published

on

இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் சுமார் 7 வருட இடைவெளிக்கு பின்னர் வெளியாகவுள்ள திரைப்படம் போட்.

இப்படத்தில் நாயகனாக யோகிபாபு நடிக்க இவருடன் கெளரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிம்பிரான் இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் கௌதம் மேனன் பின்னணி குரலில் தோன்றும் இந்த டிரெய்லரில் போரில் இருந்து 10 பேர் போர் படகில் தப்பித்து செல்கிறார்கள். அந்த படகில் திடீரென விரிசல் விழுகிறது. அந்த படகிலிருந்து 3 நபர்கள் மட்டும் குதிக்க வேண்டும் இல்லையென்றால் 10 பேரும் மூழ்கி இறக்க கூடும் என ஒரு நிலை வருகிறது. இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்படுகிறது.

இது போதாத நிலையில் இவர்களின் படகை சுற்றி பசியோடு ஒரு சுறாவும் சுற்றி திரிகிறது. இது போன்ற பரபரப்பான காட்சிகள் இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது. கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இது போன்ற ஒரு திரைப்படம் புது முயற்சியாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.