Connect with us
 

Teaser

தெறிக்கும் ரத்தம் மிரட்டும் சூர்யா வெளியானது கங்குவா டீஸர் !

Published

on

இயக்குநர் சிவா இயக்கத்தில் பிரமாண்ட படைப்பான கங்குவா படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். மிக பிரமாண்டமாக பொருட்செலவில் உருவாகியுள்ளது கங்குவா திரைப்படம்.

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம், சர்வதேச அளவில் ஒரே நேரத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பட்டாணி மற்றும் பாபி டியோல் லீட் ரோல்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் மற்றும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பதை எகிறவைத்தது. இந்த படத்தில் நடிகர் சூர்யா  பத்து விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்தப் படம் முக்கியமான மற்ற படங்களின் ரிலீஸ் டேட்களையும் பரிசீலித்த பிறகே ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படும் என்றும் படக்குழு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் கங்குவா படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.