Connect with us
 

News

கங்குவா படத்தை பார்த்து விட்டு பாராட்டிய சூர்யா !

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிக மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சமீபத்தில் எடிட்டிங் செய்தது வரை பார்த்த சூர்யா படக்குழுவையும் இயக்குனரையும் கட்டியணைத்து பாராட்டியுள்ளார்.

கங்குவா படத்தை பற்றி தன் நெருங்கிய வட்டாரத்தில் சூர்யா கூறியது. படம் நன்றாக வந்துள்ளது. ஆனாலும் படத்தின் விஃப்க்ஸ் அவ்வளவு திருப்தியாக இல்லை. அதை மட்டும் கொஞ்சம் சரி செய்யும் படி கூறியுள்ளார்.

இதனைச் சரி செய்த பின்னர் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கலாம் என்றும் அது வரைக்கும் ரிலீஸ் தேதி பற்றி பேச வேண்டாம் என்று சூர்யா படக்குழுவினரிடம் உத்தரவிட்டுள்ளாராம்.

இப்படம் அனைத்து விதத்திலும் சரியாக வந்த பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.