Connect with us
 

News

பாடகியாகவும் அறிமுகமாகும் நடிகை அதிதி ஷங்கர் !

Published

on

பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் சமீபத்தில் இவர் கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் ஜோடியாக நடித்து கதா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை இயக்குநர் முத்தையா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் நடிகை அடுத்து தற்போது பாடகியாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார் அதிதி ஷங்கர். பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள ‘கானி’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியிருப்பதாகவும் இந்த பாடலை பாட எனக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர் தமன் அவர்களுக்கு நன்றி என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

சிறு வயதிலிருந்து எனக்கு பாடகியாக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றும் அந்த விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளதால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அதிதி ஷங்கர் தெரிவித்துள்ளார்.