News
ரீவால்வருடன் வேட்டைக்கு புறப்படும் கீர்த்தி சுரேஷ் !

இயக்குநர் சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ரிவால்வர் ரீட்டா. அனைத்து விதமான ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது.
கடந்த வாரம் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமந்தா வெளியிட்டார். இதில் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கியுடன் மிரட்டலாக நிற்கும் ஒரு புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பழைய கால போஸ்டர் போல பெயிண்டிங் போல இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சந்துரு இயக்கும் இப்படத்தை ஜகதீட்ஹ் பழனிச்சாமியின் தி ரூட் தயாரிப்பு நிறுவனமும் சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டுயோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகை மற்றும் நடிகர்கள் விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது.