Connect with us
 

News

கொரோனா நோயாளிகளுக்காக தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கும் நிதி அகர்வல் !

Published

on

ஜெயம் ரவி நடித்த பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நடிகர் நிதி அகர்வால் அதனை தொடர்ந்து சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் படத்திலும் நடித்தார். தற்போது தெலுங்கில் பவன் கல்யான் நடிக்கும் சரித்திர படமான ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட பலருக்கு சினிமா பிரபலங்கள் பலர் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் உதவி செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நிதி அகர்வால் கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே டிஸ்டிரிப்ட் லவ் என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கியுள்ளார். இதில் ஒரு குழுவை நியமித்து அந்த பகுதியில் இருக்கும் நோயாளிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அதை அறிந்து அவர்களுக்கு உடனுக்குடன் இந்த நிறுவனத்தின் மூலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளாராம் நிதி அகர்வால்.

www.distributelove.org