Connect with us
 

News

ஆதி நடிக்கும் சப்தம் படத்தின் வெளியீட்டு தேதி அப்டேட் !

Published

on

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கி இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது ஈரம் படத்திற்கு பின்னர் மீண்டும் நடிகர் ஆதியுடன் இணைந்து 7ஜி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் லட்சுமி மேனன், சிம்ரன், லைலா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

ஈரம் படம் போலவே இப்படமும் சஸ்பென்ஸ் திகில் பாணியில் உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் மூணாறு, மும்மை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகளும் பின்னணி வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாக ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. தற்போது சப்தம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.