News

சார்பட்டா பரம்பரை விவகாரம் பா.ரஞ்சித்துக்கு அதிமுக நோட்டீஸ் !

Published

on

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்து இயக்கிய படம் சார்பட்டா பரம்பரை இப்படத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி, கலையரசன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து அமேஷான் ஓடிடி தளத்தில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ரஞ்சித் படம் என்றாலே அரசியல் வசனங்கள் அதிகமாகவே இருக்கும் அந்த வகையில் இப்படத்திலும் இருந்த பல அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் வடசென்னையில் நடைபெற்ற குத்துச்சண்டை கதைக்களம் என்றாலும் அதில் அரசியலையும் கலந்து படமாக்கியிருந்தார் பா.ரஞ்சித்.

அதிலும் குறிப்பாக திமுகவின் கட்சிக்கொடி படத்தில் பெரிதாக பயன்படுத்தப்பட்டிருந்தது. நெருக்கடியான காலகட்டத்தில் திகுகவினரை சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருந்தது. அதேபோலா எம்.ஜி.ஆர் அவர்களில் காட்சிகள் இல்லாததை சுட்டிக்காட்டி அப்போதே அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் திமுகவின் பிரச்சார படம் போல் இருப்பதாகவும் இது உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் எதிர்ப்புக்குறல் கொடுத்து வந்தனர். அதோடு எம்.ஜி.ஆர் அவர்களும் குத்துச்சண்டையில் ஆர்வமாக இருந்தவர். அப்படிப்பட்ட அவரை எப்படி புறக்கணிக்கலாம் என்று பா.ரஞ்சித்திற்கு எதிராக அதிமுகவினர் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் உண்மைக்கு புறம்பான காட்சிகள் உள்ளதாகவும் அதை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் பா.ரஞ்சித் மீது சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்று அதிமுக சார்பில் பா.ரஞ்சித் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Trending

Exit mobile version