Connect with us
 

News

பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார் – பிரசன்னா !

Published

on

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், Arun Vijay, பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

நடிகை பாலக் லால்வாணி கூறியதாவது:

இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறனு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் மேல நம்பிக்கை வைத்த இயக்குநர், Arun Vijay மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக நல்ல படம் தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

நடிகர் Arun Vijay கூறியதாவது:

“இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்த கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்த படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒன்றாக இருக்கும்.

இயக்குனர் GNR குமரவேலன் கூறியதாவது:

“என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.”

நடிகர் பிரசன்னா கூறியதாவது:

“பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.