News
சாலை விரிவாக்கத்திற்காக அஜித் குமார் வீட்டு சுவர் இடிப்பு !

சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்காக சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் குமார் வீட்டின் சுவர் மதில் இடிக்கப்பட்டுள்ளது.
சாலை விரிவாக்கம் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் சாலை விரிவாக்கத்திற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் நெடுஞ்சாலை துறையின் பணிகள் செய்து வருகின்றனர்.
இதற்காக மழைநீர் வடிகால் பணிகளுக்காக நடிகர் அஜித் குமார் வீட்டின் முகப்பு வாயிலில் உள்ள மதில் சுவர் இடிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு மதில் சுவர் இடிக்கப்பட்டதற்கான இழப்பீடும், சிலருக்கு முண்டும் கட்டித்தரப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.