Connect with us
 

News

வெளிநாடு செல்ல தயாராகும் வலிமை படக்குழு !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் படம் வலிமை இது இவருக்கு 60-வது படமாகும். அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.இப்படத்தின் முக்கியமான சண்டைக்காட்சியை கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த மாத இறுதியில் வலிமை படக்குழு ஐரோப்பா செல்லவுள்ளாதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வலிமை படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.