Connect with us
 

News

தலைவி படத்தின் வதந்திகளை நம்பாதீர்கள் – கங்கனா ரனாத் !

Published

on

விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவது நடிப்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கையை பற்றி படம் தலைவி. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து தணிக்கை சான்றிதலும் கிடைத்து விட்டது. இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டது படக்குழு ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக வெளியீடு தள்ளி போனது.

படத்தின் வெளியீட்டு தேதி எப்போது என்பதி இன்னும் படக்குழு முடிவு செய்யவில்லையாம். இருப்பினும் படத்தின் வெளியீடு பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளி வருகிறது.

இந்நிலையில் படத்தின் நாயகியான கங்கனாவிடம் இது பற்றி இன்ஸ்டாகிராமில் கேட்ட போது தலைவி படத்தின் வெளியீடு பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை வதந்திகளை நம்பாதீர்கள் அதிலிருந்து சற்று விலகியிருங்கள். நாடு முழுவதும் சினிமா அரங்குகள் எப்போது திறக்கப்படுகிறதோ அப்போதுதான் இந்த படம் வெளியாகும் என்று கூறினார்.