Connect with us
 

News

கங்கனாவின் பத்மஶ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தல் !

Published

on

நடிகை கங்கனா ரனாவத்துக்கு சமீபத்தில் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் 1947-ம் ஆண்டு இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று கூறினார்.

ஆங்கிலேயர் ஆட்சியின் காங்கிரஸ் ஆட்சி என்றும் குற்றம் சாட்டினார். கங்கனாவின் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு பலரும் தற்போது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

ஆம் ஆத்மி கட்சி கங்கனா ரங்கனா ரனாவத் மீது தேச விரோத வழக்குபதிவு செய்யும்படி மும்மை போலீசில் புகார் அளித்துள்ளனர். சிவனேசா கட்சி கங்கனாவுக்கு வழங்கிய பத்மஶ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பா.ஜ.க தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து கங்கனா ரனாவது தனது டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பகிர்ந்தார். அது வன்முறையை தூண்டுவதாக உள்ளது என்று சர்ச்சையை கிளப்பி கங்கனாவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கம் செய்தனர். அதனை தொடர்ந்து கொரோனா குறித்து கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ப்திவும் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தால் அதிரடியாக நீக்கப்பட்டது.