Connect with us
 

News

முன்னணி பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவை பரிசளிக்கும் தலைவி படக்குழு !

Published

on

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை பிரபல இயக்குநர் விஜய் இயக்க ஜெயலலிதா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவது நடித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவை என்றால் மிகவும் பிடிக்கும். இப்படத்தின் புரமோஷனின் ஒரு பகுதியாக பெண் பிரபலங்களுக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவையை பரிசாக வழங்கி வருகிறது படக்குழு.

அந்த பரிசுடன் ஒரு கடிதமும் அனுப்பப்படும் பெண்களிடம் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நம்பிக்கையைத் கொண்டாவதுதான் தலைவி. உங்களது விடாமுயற்சியால் சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய உங்களது நம்பிக்கையை நாங்கள் வணங்குகிறோம். உங்களிடமுள்ள தலைவியைக் கொண்டாடுவோம்

நிஜ தலைவி ஜெயலலிதாவின் அபிமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையை உங்களுக்கு வழங்க விருப்பப்படுகிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர் படக்குழு.