Connect with us
 

News

பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு கொண்டு வந்துள்ளோம் – கங்கனா ரனாவத் !

Published

on

தமிழகத்தின் தங்கத்தாரகை, தமிழ்நாட்டு பெண்களின் ஆதர்ஷமாக வாழ்ந்த, புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு “தலைவி” படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் விஜய். இப்படவெளியீட்டையொட்டி ஒட்டி படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது.

அதில பேசிய நடிகை கங்கனா ரனாவத் இப்படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமான படம். இந்த இரண்டு வருடங்களில் பலரும் பல ஏற்ற இறக்கங்களை கடந்து வந்துள்ளோம். இப்படத்தை பல தடைகளை கடந்து திரையரங்கிற்கு கொண்டு. வந்துள்ளோம். அர்விந்த்சாமி, மதுபாலா மேடம் போன்ற மிகப்பெரிய நடிகர்களுடன் நடித்தது பெருமை.

மதுபாலா மேடம் என்மீது மிகுந்த அக்கறை காட்டினார்கள். அர்விந்த்சாமி மூலம் ஜெயலலிதா மேடம் பற்றி நிறைய கதைகளை கேட்டறிந்தேன். சமுத்திரகனி சார், தம்பி ராமையா சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். இன்னும் நான் படம் பார்க்கவில்லை ஒரு சிறு குழந்தை போல் நானும் படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தயாரிப்பாளர்கள் எந்த நிலையிலும் எந்தவித சமரசமும் இல்லாமல் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இப்படத்தை தன் இசையால் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இந்தப்படம் என் வாழ்வில் மிக முக்கியமான படம் இந்த வாய்ப்பை தந்த விஜய்க்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி.