News
கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிக்கும் அல்லு அர்ஜூன் !

தமிழ் சினிமாவில் வெற்றிகரமான பல தரமான முன்னணி நடிகர்களின் படங்களை கொடுத்து புகழ் பெற்ற தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. தற்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கான நாரப்பாவை தயாரிப்பாளார் சுரேஷ் பாபுவுடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
அதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படமான நானே வருவேன் படத்தையும் தயாரிக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
இந்நிலையில் கலைப்பு எஸ்.தாணு அடுத்ததாக தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படம் தயாரிக்கவுள்ளாராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படமாக உருவாகவுள்ளதாம். மேலும் இப்படத்தை கோலிவிட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் இயக்கவுள்ளாராம். அது யார் என்பது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.