Connect with us
 

News

ஶ்ரீ வள்ளி பாடலை ஆங்கிலத்தில் பாடிய எம்மா ஹீஸ்டர்ஸ் !

Published

on

உலகின் மிகவும் புகழ்பெற்ற டச்சு நாட்டு பாடகி எம்மா ஹீஸ்டர்ஸ். இவரின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஶ்ரீவள்ளி பாடலை ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கலந்து பாடிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஶ்ரீவள்ளி பாடல் உலகம் முழுவதும் அனைவரின் பிடித்த பாடலாக மாறியுள்ளது. பல முண்ணனி பாடகர்கள் மற்றும் பாடகிகள் அப்பாடலை பாடி தற்போது வெளியிட்டு வருகிறார்கள்.

தேவி ஶ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பாடகர் சித் ஶ்ரீதாம் பாடியுள்ளார். தற்போது எம்மா ஹூஸ்ட்டர்ஸ் இப்பாடலை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் பாடிய வீடியோயை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் அவரது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.