Connect with us
 

News

வெளியான 11 நாட்களின் 250 கோடி ரூபாய் வசூல் செய்த வாரிசு !

Published

on

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 11-ம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. விஜய்யுடன் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷியாம், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, சங்கீதா, ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வாரிசு திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதே போல தெலுங்கிலும் வாரசுடு என்ற பெயரில் சங்கராந்தியை முன்னிட்டு இந்த படம் உலக முழுவதும் ஜனவரி 14-ம் தேதி வெளியானது.

ஆரம்பத்தில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. வசூலில் எந்தப் பாதிப்பும் ஆகவில்லை. தமனின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் அனைத்து தரப்பினர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை நேற்று கேக் வெட்டி படக்குழு கொண்டாடியது. இந்த நிலையில் வெளியாகி 11 நாட்களின் உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.