Connect with us
 

Reviews

Anbarivu – Movie Review !

Published

on

ஹி ப் ஹாப் தமிழா ஆதி, நெப்போலியன், விதார்த், காஷ்மீரா, சாய்குமார் உள்ளிட்ட பலர் நடித்து OTTயில் வெளியாகியுள்ள படம்தான் அன்பறிவு. அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அஸ்வின் ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Movie Details

மதுரையை மையமாகக் கொண்ட கதைக்களம். ஊர் பெரியவர் முனியாண்டியாக நெப்போலியன். அவரது மகள் லட்சுமியாக ஆஷா சாரத். முனியாண்டியிடம் வேலை செய்யும் பசுபதியாக வித்தார்த். பசுபதியின் பார்வையில் படம் தொடங்குகிறது. கதை சொல்ல ஆரம்பிக்கும் பசுபதிதான் படத்தின் வில்லன் என்பதை படம் தொடங்கிய சில நிமிடங்களில் அவர் வாயாலையே ஒப்புக்கொள்கிறார்.

மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நெப்போலியன் மக்கள் செல்வாக்கோடு வாழ்ந்து வருகிறார். அவரிடம் விதார்த் உதவியாளராக பணிபுரிகிறார். அரசியலில் தனக்கு பதவி கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனிடையே விதார்த்தின் நண்பர் சாய் குமார் நெப்போலியன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது.

இந்நிலையில் விதார்த்துக்கு கிடைக்க வேண்டிய பதவி நெப்போலியனின் மருமகன் சாய் குமாருக்கு கிடைக்கிறது. இதனால் ஆத்திரம் அடையும் விதார்த் நெப்போலியனின் குடும்பத்தை சதி செய்து பிரிக்கிறார். இதனால் நெப்போலியனின் பேரன்கள் இருவரும் குழந்தையாக இருக்கும் போதே பிரிகிறார்கள்.

ஒரு குழந்தை மதுரையில் அம்மாவிடம் வளருகிறது. இன்னொரு குழந்தை கனடாவில் அப்பாவிடம் வளர்கிறது. இறுதியில் பிரிந்து போன குடும்பம் ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

குறிப்பாக மேல் அதிகாரிகள் இவரை அடித்து அசிங்கமாக திட்டி அடித்து அவமானப்படுத்தும் போது அதை நினைத்து இவர் உருகி அழும் காட்சிகள் நம்மை கண்கலங்க வைக்கிறது.

ஹிப்ஹாப் தமிழா அன்பு, அறிவு என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதில் அன்பு கதாபாத்திரம் மெர்சல் படத்தில் வரும் விஜய் நினைவுபடுத்துகிறது. படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருந்தாலும் இவர்களுக்கான காட்சி குறைவு தான்.

அன்புதான் அறிவு என்ற ஒரு கருத்தை சொல்ல முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரும் சமம் என்பதை சொல்லும் விதம் அற்புதம் !
Cinetimee

அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் பெரிய நட்சத்திரங்களைக் கையாளக்கூடிய ஒரு சிறந்த இயக்குனராக தோன்றுகிறார் .ஆக்‌ஷன் எபிசோடுகள் மற்றும் ஸ்லோ-மோ ஷாட்கள் மசாலா பொழுதுபோக்கு அம்சத்திற்கு துணையாக நேர்த்தியாக செயல்படுத்தப்பட்டுள்ளன. அன்பறிவு – அன்பே அறிவு என்ற கருத்து சுவாரஸ்யமானது. திரைப்படம் குடும்ப உணர்வுகள் மற்றும் மதிப்புகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களை நன்றாக ஈர்க்கும் .

மதுரைக் காரர்களின் பெருமையைச் சொல்வதாக, அவர்களை ரொம்பவே லந்தடித்திருக்கிறார்கள். மதுரைக்காரன் வேட்டியை மடித்துக் கட்டினால் வெட்டுக்குத்து, சட்டையை இழுத்து விட்டால் சம்பவமாம். இயக்குநர் இப்படியெல்லாம் சொல்லி மூன்று வரிக் கதையை மூன்று மணிநேரம் இழுத்து நம்மை சம்பவம் பண்ணிவிட்டார்.

அதிலும் ஆதி பேச ஆரம்பித்து விட்டால் கட் சொல்லவே தோன்றவில்லை போலிருக்கிறது இயக்குனருக்கு. எடிட்டருக்கும் எஸ்கார்ட் போட்டு விட்டார்களோ என்னவோ, அவரும் வெட்டத் தோன்றாமலேயே வெட்டியாக விட்டு விட்டார்.

எப்போதும் போல, ஹிப்ஹாப் தமிழா ஆதி எனர்ஜியும் வசீகரமும் நிறைந்தவர், இம்முறையும் இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதால் இரட்டிப்பு எனர்ஜி கிடைத்துள்ளது. இருப்பினும், இரண்டு கதாபாத்திரங்களையும் வேறுபடுத்துவதற்கு, உடல் மொழி அல்லது பாணியின் அடிப்படையில் சில தனித்துவமான அம்சங்களை அவர் கொண்டு வந்திருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் கவிதாபாரதி, டி.சி. கதாப்பாதிரத்தில் வரும் கவின் ஜெய் பாபு இவர்கள் செய்யும் வேலைகள் அனைத்துமே சில போலீஸ் அதிகாரிகள் செய்யும் கேவலமான செயல்களை நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

அன்பு, அறிவு இரண்டும் பல இடங்களில் ஒரே மாதிரியாகத் தெரிகிறது. நெப்போலியன், தனது கம்பீரமான திரை இருப்பு மற்றும் அணுகுமுறையால், நம் கவனத்தை ஈர்க்கிறார், மேலும் அவர் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையான நீதியைச் செய்கிறார். ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பாடல்கள் ஹிட் அடிக்க தவறினாலும், பின்னணி இசை படத்திற்கு நல்ல ஆதரவை அளிக்கிறது.

தமிழ் சினிமா ரசிகர்களே அடுத்த காட்சி என்ன என திரைக்கதை எழுதும் அளவிற்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு குடும்ப கதைதான் என்பதால், சுவார்ஸ்யம் இல்லை. ஹிப்-ஹாப் ஆதியின் வழக்கமான ஸ்டைலில், ஆங்காங்கே அட்வைஸ், இளைஞர்களுக்கான பஞ்ச், நாடு, நாட்டு மக்கள், பாசம் போன்ற கமெர்சியல் மசாலா இதிலும் நிறைய உண்டு.வொர்கவுட்டானதா என்றால், சில இடங்களில் ஆனது சில இடங்களில் சொதப்பி இருக்கிறது.

ரன்னிங் டைம் -ஐ குறைத்து இருந்தால் அன்பறிவு ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக சிறப்பாக அமைந்து இருக்கும்.


மொத்தத்தில் அன்பறிவு லாஜிக் பார்க்காமல் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.